சாத்தூர் அரசு மருத்துவமனையை நவீனப்படுத்துவேன் எம்.எல்.ஏ. எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் பேச்சு
சாத்தூர் நகர் பகுதிகளில் அ.ம.மு.க. வின் சின்னமான குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த எம்.எல்.ஏ. எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் சாத்தூர் அரசு மருத்துவமனையினை நவீன படுத்துவேன் என்றார்.
விருதுநகர்,
சாத்தூர் நகர் பகுதிகளான பெரியார் நகர், தில்லை நகர், நடராஜா தியேட்டர் ரோடு, ராஜகோபால் திருமண மண்டபம் தெரு, பங்களா தெரு உள்ளிட்ட முக்கிய நகரப்பகுதிகளில் அ.ம.மு.க. வின் வெற்றி சின்னமான குக்கர் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தெருக்களில் வீடு வீடாக நடந்து சென்று பெண்கள் மற்றும் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தபோது கடந்த ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி தெரிவித்த பின் பேசிய எம்.எல்.ஏ எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் நகர்ப் பகுதிகளில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை செய்துள்ளேன். இதேபோன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்வதற்கு எனக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுமாறு உங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார். மேலும் இப்பகுதியில் பொதுமக்கள் கூறிய கோரிக்கைகள் அனைத்தும் நான் நிறைவேற்றியுள்ளேன். தெருக்களில் உள்ள அனைத்து சாலைகளையும் பேவர்பிளாக் கல் சாலையாக மாற்றி உள்ளேன். பல்வேறு இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து வீடுகள்தோறும் குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்துள்ளேன். பல தெருக்களில் மின்விளக்கு வசதி செய்து கொடுத்துள்ளேன். முக்கியசாலை சந்திப்புகளில் உயர் கோபுர மின் விளக்கு அமைத்து உள்ளேன். மீண்டும் என்னை வெற்றி பெறச் செய்தால் சாத்தூர் பகுதி மக்களின் அனைத்து குறைகளையும் தீர்த்து வைப்பேன் மேலும் சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையினை நவீனப்படுத்தி மிகப்பெரிய அளவிலான அவசர சிகிச்சை பிரிவு உருவாக்கி தருவேன் என்றார். மேலும் பேசிய எம்எல்ஏ ராஜவர்மன் எனக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து என்னை சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் ஒருமுறை அனுப்பி வைத்தால் நான் உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்து உங்களில் ஒருவனாக உங்கள் வேலைக்காரனாக மக்கள் சேவையாற்ற வாய்ப்புத் தாருங்கள் என்று கேட்டுக்கொண்டார். பிரச்சாரத்தின் போது அவருடன் அ.ம.மு.க நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story