மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் யானையை சுற்றி, சுற்றி வந்த நாய்
நலவாழ்வு முகாமிற்கு ெசன்ற தனது நண்பனான மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் யானையை காணாது தவித்த நாய், முகாமில் இருந்து திரும்பி வந்த யானையை பார்த்ததும் அதை சுற்றி, சுற்றி வந்த நெகிழ்ச்சியான காட்சியை கண்ட பக்தர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
மயிலாடுதுறை;
நலவாழ்வு முகாமிற்கு ெசன்ற தனது நண்பனான மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் யானையை காணாது தவித்த நாய், முகாமில் இருந்து திரும்பி வந்த யானையை பார்த்ததும் அதை சுற்றி, சுற்றி வந்த நெகிழ்ச்சியான காட்சியை கண்ட பக்தர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
விலங்குகளின் பாசம்
மனிதர்களுக்கு மட்டும்தான் பாசம், ேநசம் உண்டு என்பதில்லை. மாறாக, விலங்குகளுக்கும் பாசமும், நேசமும் உண்டு என்பதை அவ்வப்போது நாம் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் நலவாழ்வு முகாமிற்கு சென்ற தனது நண்பனான யானையை காணாது தவித்த நாய், முகாமில் இருந்து திரும்பி வந்த யானையை பார்த்தும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து அந்த யானையையே சுற்றி, சுற்றி வந்தது. இந்த நெகிழ்ச்சியான காட்சியை பார்த்த பக்தர்கள் வியப்பு அடைந்தனர்.
இது பற்றிய விவரம் வருமாறு:-
நண்பர்களான யானை-நாய்
மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் யானை அபயாம்பிகை இந்து சமய அறநிைலயத்துறை சார்பில் நடந்த யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாமிகு கடந்த மாதம் 6-ந் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் 48 நாட்கள் நடந்த முகாமில் இந்த யானை பங்கேற்பதற்காக புறப்பட்டு சென்றது.
இந்த யானையின் பாகன் செந்தில், தனது வீட்டில் கடந்த 7 வருடங்களாக அப்பு என்ற ஒரு நாயை வளர்த்து வருகிறார். இந்த நாய், யானைப்பாகன் செந்திலுடன் எப்போதும் இருக்கும். யானைப்பாகன், யானையை பராமரிக்கும்போது அதன் அருகிலேயே இருக்கும். யானையை பாகன் வெளியில் அழைத்து செல்லும்போது யானையுடன், நாயும் உடன் செல்லும். இதனால் யானையும், நாயும் நண்பர்களாகி விட்டனர்.
சோகத்தில் ஆழ்ந்தது
இந்த நிலையில் யானை அபயாம்பிகை நலவாழ்வு முகாமிற்கு சென்றதும் தனது நண்பனை காணாமல் நாய் அப்பு வாடிப்போனது. எப்போதும் தன் அருகிலேயே இருக்கும் தனது நண்பனான யானையை காணாது நாய் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தது. யானை கட்டி வைக்கப்படும் இடத்திற்கு சென்று அடிக்கடி யானையை தேடிப்பார்த்து வந்தது.
இந்த நிலையில் முகாமில் கலந்து கொண்டு விட்டு யானை அபயாம்பிகை மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலுக்கு நேற்று அதிகாலை வந்து சேர்ந்தது. கோவிலுக்கு வந்த யானைக்கு இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை ஆய்வாளர் கண்ணதாசன் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
பக்தர்கள் வியப்பு
அப்போது கோவிலுக்கு வந்த யானை அபயாம்பிகையை பார்த்ததும் நாய் அப்பு உற்சாகமாக சத்தம் எழுப்பியவாறு யானையை சுற்றி சுற்றி வந்தது. கோவில் வாசலில் இறக்கி விடப்பட்டு கோவில் உள்ளே சென்ற யானையின் பின்னாலேயே நாயும் ஓடியது.
யானைக்கு பூஜை செய்தபோதும் யானையை சுற்றி சுற்றியே வலம் வந்தது. இந்த நெகிழ்ச்சியான காட்சியை பார்த்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
இதுகுறித்து யானைப்பாகன் செந்தில் கூறியதாவது:-
சுற்றி, சுற்றி வந்தது
நான் எனது வீட்டில் கடந்த 7 வருடங்களாக நாய் வளர்த்து வருகிறேன். அப்பு என்ற அந்த நாய், கோவில் யானையுடன் நட்பாக பழகி வந்தது. இருவரும் அன்பாகவும், பாசத்துடனும் பழகி வந்தனர். யானை கோவிலுக்கு சென்றால் அந்த யானையை நாய் பின் தொடர்ந்து செல்லும். பெரும்பாலும் யானை கூடவே நாயும் இருக்கும்.
இந்த நிலையில், யானை முகாமுக்கு சென்றதால், யானையை பார்க்க முடியாமல் நாய், மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தது. அடிக்கடி யானை கட்டி வைக்கப்பட்டு இருக்கும் இடத்திற்கு சென்று யானையை தேடிப்பார்த்து வந்துள்ளது. இந்த நிலையில் முகாமில் இருந்து திரும்பி வந்த யானையை கண்டு மகிழ்ச்சி அடைந்த நாய், மகிழ்ச்சி வெள்ளத்தில் யானையை சுற்றி, சுற்றி வந்தது. பிற நாய்கள் தனது அருகில் வந்தால் விரட்டும் அபயாம்பிகை, நாய் அப்புவை கண்டால் பாசத்துடன் விளையாடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
யானை அபயாம்பிகை, நாய் அப்புவின் நட்பு பக்தர்களிடையே மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்லலாம்.
Related Tags :
Next Story