முதல்-அமைச்சரை அவதூறாக பேசியதாக டி.டி.வி.தினகரன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு


முதல்-அமைச்சரை அவதூறாக பேசியதாக டி.டி.வி.தினகரன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 29 March 2021 11:19 PM IST (Updated: 29 March 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

டி.டி.வி.தினகரன் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் கடந்த 23-ந் தேதி மாலை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு பேசினார்.

இந்த கூட்டத்தில் அவர், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோரை இழிவாகவும், அவதூறாகவும் பேசியதாக கூறி அ.தி.மு.க. வக்கீலான சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த பாபுமுருகவேல் என்பவர், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், உள்நோக்கத்துடன் குறைசொல்லி பேசுதல், அவதூறு பரப்புதல், அவமதித்து பேசுதல், தேர்தல் சம்பந்தமாக பகையை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் டி.டி.வி.தினகரன் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story