திண்டிவனம், மயிலத்தில் வியாபாரி உள்பட 2 பேரிடம் ரூ.2 லட்சம் பறிமுதல் பறக்கும் படையினர் நடவடிக்கை


திண்டிவனம், மயிலத்தில் வியாபாரி உள்பட 2 பேரிடம் ரூ.2 லட்சம் பறிமுதல் பறக்கும் படையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 29 March 2021 11:21 PM IST (Updated: 29 March 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம், மயிலத்தில் வியாபாரி உள்பட 2 பேரிடம் ரூ.2 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திண்டிவனம், 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த குரும்பரம் பஸ் நிலையம் அருகில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சரவணன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது, அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

விசாரணையில் அதில் வந்தது, கூனிமேடு பகுதியை சேர்ந்த பிஸ்கட் வியாபாரி சரண்ராஜ் (வயது 24 ) என்பதும் அவர் 1 லட்சத்து 13 ஆயிரத்து 921 ரூபாய் எடுத்து வந்ததும் தெரியவந்தது. அப்போது அவர்,  மரக்காணம் தாலுகா பகுதியில் பிஸ்கட் விற்பனை செய்த தொகையை வசூலித்து வருவதாக கூறினார். 

இருப்பினும் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால், அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து திண்டிவனம் தேர்தல் நடத்தும் உதவி அதிகாரி உஷா முன்னிலையில் திண்டிவனம் கருவூலத்தில் செலுத்தினர்.

மயிலம்

மயிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூட்டேரிப்பட்டு இரட்டணை சாலை, வெங்கந்தூர் சந்திப்பில் தேர்தல் நிலை கண்காணிப்புக்குழு அலுவலர் இளநிலை பொறியாளர் மகேந்திரவர்மன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வீடூரை சேர்ந்த தேவகுமார் மகன் ஆம்ஸ்டிராங் ( 26), என்பவர் ஓட்டி வந்த காரில் வந்த முகமது ராவுத்தர் மகன் சாகுல் அமீது (56) என்பவர்  90 அயிரத்து 500-ஐ உரிய ஆவணம் இன்றி எடுத்து வந்தது தெரியவந்தது.

 இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

Next Story