அகோரமூர்த்திக்கு 1008 சங்காபிஷேகம்


அகோரமூர்த்திக்கு 1008 சங்காபிஷேகம்
x
தினத்தந்தி 29 March 2021 11:22 PM IST (Updated: 29 March 2021 11:22 PM IST)
t-max-icont-min-icon

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் அகோரமூர்த்திக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவெண்காடு;
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் அகோரமூர்த்திக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
சுவேதாரண்யேஸ்வரர் கோவில் 
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம் அகோரமூர்த்தி சுவாமியாக தனி சன்னதியில் இந்த கோவிலில் அருள்பாலித்து வருகிறார். இவரின் திருமேனியின் அடிப்பகுதியில் அஷ்ட பைரவர்கள் காட்சியளிப்பது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. இவரை வழிபட்டால் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள், நீ்ங்கி, செல்வ செழிப்பு கிடைப்பதாக ஐதீகம்.
சங்காபிஷேகம்
பல்வேறு சிறப்புகளைப் பெற்ற அகோரமூர்த்தி சுவாமிக்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று 1008 சங்காபிஷேகம் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு 1008 சங்காபிஷேகம் நடந்தது. இதையொட்டி அகோரமூர்த்தி சன்னதி முன்பு 1008 சங்குகள் புனித நீரால் நிரப்பி, சிறப்புயாகம் நடந்தது. தொடர்ந்து அகோரமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், சங்காபிஷேகமும் நடந்தது. பின்னர் அகோர பூஜையும் தீபாராதனையும் காட்டப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story