உளுந்தூர்பேட்டை தொகுதியில் பயிற்சியில் கலந்துகொள்ளாத வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நோட்டீஸ் கலெக்டர் கிரண்குராலா உத்தரவு
உளுந்தூர்பேட்டை தொகுதியில் பயிற்சியில் கலந்துகொள்ளாத வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நோட்டீஸ் கலெக்டர் கிரண்குராலா உத்தரவு
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் துணை அலுவலர்கள் ஆகியோருக்கு 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு அங்குள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன் தலைமைதாங்கினார். தேர்தல் மண்டல அதிகாரிகள் பயிற்சி அளித்தனர்.
பயிற்சி வகுப்பை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான கிரண் குராலா நேரில் ஆய்வு செய்தார். அப்போது சில வாக்குச்சாவடி அலுவலர்கள் பயிற்சியில் கலந்துகொள்ளாமல் விடுப்பு எடுத்து இருந்ததை அறிந்தார். இதையடுத்து விடுப்பில் சென்ற வாக்குச்சாவடி அலுவலர்கள் என்ன காரணத்துக்காக விடுப்பில் சென்றார்கள்? என நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கும்படி உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கோபாலகிருஷ்ணனுக்கு கலெக்டர் கிரண் குராலா உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story