மயிலம் முருகன் கோவிலில் தெப்ப உற்சவம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
மயிலம் முருகன் கோவிலில் தெப்ப உற்சவம் நடை பெற்றது.
மயிலம்,
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் பிரசித்தி பெற்ற வள்ளி தெய்வானை சமதே முருகப் பெருமான் கோவில் அமைந்துள்ளது. இங்கு முருகன் வள்ளி தெய்வானையுடன் திருமண கோலத்தில் அருள்பாலிப்பது தனி சிறப்பாகும்.
இங்கு பங்குனி உத்திர விழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினசரி முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, திருக்கல்யாணம், தேரோட்டம் நிகழ்ச்சிகள் நடந்தது.
தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு தெப்பல் உற்சவம் நடந்தது.
இதையொட்டி வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் அக்னி தீர்த்த குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகன் சிறப்பு அ லங்காரத்தில் எழுந்தருள தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்க்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்ட சிவஞான பாலய சுவாமிகள் மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story