மஞ்சுவிரட்டில் 10 பேர் காயம்


மஞ்சுவிரட்டில் 10 பேர் காயம்
x
தினத்தந்தி 29 March 2021 11:47 PM IST (Updated: 29 March 2021 11:47 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்துர் மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் 10 ேபர் காயம் அடைந்தனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே நெடுமரத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் மலையரசி அம்மன் கோவில் திருவிழா நடப்பது வழக்கம். திருவிழாவை முன்னிட்டு இக்கிராமத்தில் இரு தரப்பினர் சார்பில் மஞ்சுவிரட்டு நடப்பது வழக்கம். ஆனால் தற்போது தேர்தல் நடைபெற இருப்பதால் மஞ்சுவிரட்டிற்கு உரிய பாதுகாப்பு வழங்க இயலாது என மாவட்ட நிர்வாகம் கூறியதால், கிராமத்தினர் தரப்பில் மஞ்சுவிரட்டு நடத்தவில்லை. இந்நிலையில் நேற்று திருப்பத்தூர் மற்றும் இதனைச்சுற்றியுள்ள கிராமங்களான கோட்டையிருப்பு, ரணசிங்கபுரம், திருவுடையார்பட்டி, கும்மங்குடி ஊர் குலத்தான் பட்டி, மணக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு மாடுகளை நெடுமரம் வயல் பகுதிகளில் ஆங்காங்கே கட்டுமாடுகளாக அவிழ்த்து விட்டனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச்சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் மாடுகளைப்பிடித்தனர். இதில் மாடு முட்டியதில் 10 பேருக்கு மேல் காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களுககு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் நாட்டரன்கோட்டையைச் சேர்ந்த செல்லமணி மகன் கரன் (25) என்பவர் மேல்சிகிச்சைகாக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோல் பட்டமங்கலம் தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட காளை மாடுகள் கொண்டுவரப்பட்டு கட்டுகளை அவிழ்த்து விடப்பட்டன.



Next Story