தொழிலாளிக்கு 6 மாதம் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தேனியை சேர்ந்த தொழிலாளிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தேனி:
தேனி அல்லிநகரம் வெங்கலாநகர் முதல் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 51). கூலித்தொழிலாளி.
இவர் கடந்த ஆண்டு 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதை அந்த சிறுமி தனது தாயிடம் தெரிவித்தார்.
சிறுமியின் தாய், அய்யப்பனிடம் சென்று கேட்டபோது, அவர் சாதியை சொல்லி திட்டியதுடன், ஆபாசமாக பேசியுள்ளார்.
இது குறித்து சிறுமியின் தாய் அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்தனர்.
இந்த வழக்கு மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ராஜராஜேஸ்வரி ஆஜராகி வாதாடினார்.
வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி வெங்கடேசன் நேற்று தீர்ப்பளித்தார்.
அய்யப்பனுக்கு பாலியல் தொந்தரவு செய்த குற்றத்துக்காக போக்சோ சட்டத்தின் கீழ் 6 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால், மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
Related Tags :
Next Story