கடலில் தவறி விழுந்த மீனவரின் கதி என்ன
நாகை அருேக கடலில் தவறி விழுந்து மீனவரின் கதி என்ன என்று தெரியாமல் அவரது உறவினர்கள் கவலையில் உள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகை அருேக கடலில் தவறி விழுந்து மீனவரின் கதி என்ன என்று தெரியாமல் அவரது உறவினர்கள் கவலையில் உள்ளனர்.
கடலில் தவறி விழுந்த மீனவர்
நாகை கல்லார் பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மகன் கவிச்செல்வன் (வயது30). மீனவர். நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில், கவிசெல்வனுக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த அமிர்தலிங்கம், மணிவண்ணன் ஆகிய 3 பேரும் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இவர்கள் சுமார் 2 நாட்டிக்கல் தொலைவில் சென்று கொண்டிருந்த போது, அலை சீற்றம் காரணமாக படகில் இருந்து கவிச்செல்வன், கடலில் தவறி விழுந்தார். சிறிது தூரம் சென்றவுடன் படகின் பின்னால் அமர்ந்திருந்த கவிச்செல்வனை காணாததை அறிந்த சக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்து கடலில் நீண்ட நேரம் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
தேடும் பணி
இதுகுறித்த தகவலை கரைப் பகுதிக்கு வந்து கல்லார் மீனவ கிராம மக்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து 10-க்கும் மேற்பட்ட படகில் கடலுக்கு சென்ற மீனவர்கள், மீட்பு கவசங்களுடன் மாயமான மீனவர் கவிச்செல்வனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கடலோர காவல் குழும போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உறவினர்கள் கவலை
இதனிடையே கடலில் தவறி விழுந்த கவிசெல்வனின் கதி என்ன என்று தெரியாமல் கவலை அடைந்த அவரது உறவினர்கள் கடற்கரையில் அமர்ந்து கதறி அழுதனர். மாயமான மீனவர் கவிச்செல்வனுக்கு கனிமொழி என்ற மனைவியும், 4 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story