தெப்பக்குளத்தில் சிறுவர்கள் உற்சாக குளியல்


தெப்பக்குளத்தில் சிறுவர்கள் உற்சாக குளியல்
x
தினத்தந்தி 29 March 2021 6:30 PM GMT (Updated: 29 March 2021 6:30 PM GMT)

காளையார்கோவில் தெப்பக்குளத்தில் சிறுவர்கள் உற்சாகமாக குளித்தனர்.

காளையார்கோவில்,

காளையார்கோவில் தெப்பக்குளத்தை தன்னார்வ அமைப்பினர் தூர்வாரி சீரமைத்தனர். இதை தொடர்ந்து இந்த ஆண்டு பெய்த பலத்த மழையால் தெப்பக்குளம் நீர் நிரம்பி உள்ளது. தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரிக்கிறது. இந்த நிலையில் வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க சிறுவர்கள் காளையார்கோவில் தெப்பக்குளத்தில் உற்சாகமாக குளித்து வருகின்றனர். தெப்பக்குள கரையில் இருந்து துள்ளி குதித்து குளிக்கின்றனர். தண்ணீர் நிறைந்து தெப்பக்குளம் காணப்படுவதால் சிறுவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் குளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story