தேர்தலை புறக்கணிக்க பொதுமக்கள் முடிவு


தேர்தலை புறக்கணிக்க பொதுமக்கள் முடிவு
x
தினத்தந்தி 30 March 2021 12:13 AM IST (Updated: 30 March 2021 12:13 AM IST)
t-max-icont-min-icon

தேர்தலை புறக்கணிக்க பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்

கீழக்கரை
முதுகுளத்தூர் சட்டமன்ற‌ தொகுதிக்கு உட்பட்ட ஏர்வாடி நாச்சம்மைபுரத்தில் இருந்து மங்களேஸ்வரி நகர் செல்லும் வழியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து இருப்பதாகவும், அதனை மீட்கக்கோரியும் அப்பகுதியை சேர்ந்தோர் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த ஏர்வாடி இன்ஸ்பெக்டர் சாமிநாதன் நேரடியாக சென்று அறிவிப்பு பலகையை அகற்றும்படி ஊர் மக்களிடம் கூறினார். அப்போது அவர்கள் கூறியதாவது:- சிலர் பொதுமக்கள் சென்று வரும் சாலை பகுதியை ஆக்கிரமித்து வேலி போட்டு அடைத்துள்ளார்கள். இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அரசுக்கு சொந்தமான இருந்து இடத்தை மீட்கும் வரை வாக்களிக்கப் போவதில்லை என்று பொதுமக்கள் கூறினர்.

Next Story