தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 30 March 2021 12:19 AM IST (Updated: 30 March 2021 12:19 AM IST)
t-max-icont-min-icon

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

விராலிமலை:
விராலிமலை தாலுகா கீழ தாளப்பட்டி வருசகாடு களத்தில் உள்ள ஒரு மரத்தில் ஒருவர் தூக்குப்போட்டு இறந்த நிலையில் கிடப்பதாக அப்பகுதியில் ஆடுகள் மேய்த்துக் கொண்டு இருந்தவர் விராலிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரனை செய்தனர். விசாரணையில், இறந்தவர் பெருவாய் கிராமம் கீழ தாளப்பட்டியை சேர்ந்த அயினான் மகன் தொழிலாளி மோகன்ராஜ் (வயது 49) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் மோகன்ராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story