கோவில்களில் சிறப்பு வழிபாடு


கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 30 March 2021 12:24 AM IST (Updated: 30 March 2021 12:24 AM IST)
t-max-icont-min-icon

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கல்லல்,

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

பங்குனி உத்திர திருவிழா

பாகனேரி பாரத விநாயகர் கோவிலில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பால், தயிர், இளநீர், மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் புதிய பட்டாடை அணிவித்து மலர் மாலைகள் சூழ மகா தீபாராதனை காண்பிக்்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பிரசாதம் வினியோகிக்கப்பட்டது.
பாகனேரி அருகே நகரம்பட்டி காளியம்மன் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பால்குடம், சந்தனக்கூடு விழா நேற்று நடைபெற்றது. கடந்த 20-ந்தேதி காப்பு கட்டுடன் தொடங்கியது. இதை ெதாடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.நேற்று முன்தினம் பக்தர்கள் பால்குடம், சந்தன குடம் எடுத்து பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பால்குடம் எடுத்த பக்தர்கள்

மதகுபட்டி மண் மலையாண்டி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா  நடைபெற்றது.மதகுபட்டி மேலத்தெருவில் இருந்து பால்குடம், கரகம் எடுத்து 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையாண்டி கோவில் சென்று அபிஷேகம் செய்து வழிபட்டனர்.பின்னர் சாமி ஊர்வலம் நடைபெற்றது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

எஸ்.புதூர்

எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டாரங்களான செட்டிகுறிச்சி, புழுதிபட்டி, தர்மபட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள முத்தாலம்மன் கோவில்களில் ஆண்டுதோறும் பங்குனி பொங்கல் கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. காப்பு கட்டிய நாள் முதல் தினமும் இரவில் கும்மி அடித்தல் நிகழ்ச்சி அந்தந்த ஊர் கோவில் மந்தையில் நடைபெற்றது.
 பங்குனி பொங்கல் திருவிழா அன்று குழந்தை பாக்கியம் பெற்ற பக்தர்கள் கரும்பு தொட்டில்கள் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் இளைஞர்கள் மாறுவேடமிட்டு வந்தனர். புலி வேஷம், பொய்க்கால் குதிரை, குறவன்- குறத்தி, கடவுள்கள், கரடி, விலங்குகள், உள்ளிட்ட பல வேடமிட்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story