புதுக்கோட்டை அருகே வங்கி ஏ.டி.எம்மிற்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.2 கோடி சிக்கியது
புதுக்கோட்டை அருகே வங்கி ஏ.டி.எம்மிற்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.2 கோடி சிக்கியது.
அன்னவாசல்:
வாகன சோதனை
தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுதை தடுப்பது மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக்குழுவினர் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் சாலையில் கட்டியாவயல் அருகே தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
ரூ.2 கோடி சிக்கியது
அப்போது அந்த வழியாக வந்த இரண்டு வேன்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஒரு வேனில் ரூ.1 கோடியே 60 லட்சமும், மற்றொரு வேனில் ரூ.40 லட்சமும் இருத்ததாக தெரிகிறது. இதனையடுத்து பறக்கும்படையினர் அந்த பணத்தை பிடித்து இதுகுறித்து புதுக்கோட்டை தேர்தல் நடத்தும் அலுவலர் டெய்சிகுமாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் அந்த பணத்திற்கு உண்டான ஆவணங்கள் சரியாக இருந்ததால், அதனை உரியவர்களிடமே திருப்பி கொடுக்கப்பட்டது. மேலும் அந்த பணம் ஏ.டி.எம். எந்திரத்தில் வைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டது என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து டெய்சிகுமாரிடன் கேட்டப்போது, அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இருந்ததால் பறிமுதல் எதுவும் செய்யப்படவில்லை. உடனடியாக அந்த வேன்கள் விடுவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story