கொளுத்தும் வெயிலால் பொதுமக்கள் அவதி
வத்திராயிருப்பு பகுதியில் கொளுத்தும் வெயிலால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயிலினால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாலைகளில் வாகனங்கள் மட்டுமின்றி பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்து காணப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெளியூர்களில் இருந்து வத்திராயிருப்பு பகுதிக்கு அன்றாட அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் மக்களின் வருகை குறைந்து பஜார் பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் முத்தாலம்மன் பஜார் பகுதி மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
Related Tags :
Next Story