விராலிமலை தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ய முயன்ற 2 தி.மு.க. வினர் மீது வழக்கு
பணப்பட்டுவாடா செய்ய முயன்ற 2 தி.மு.க. வினர் மீது வழக்கு
அன்னவாசல்:
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதிக்குட்பட்ட திருநாடு சாலையில் உள்ள திருவண்ணாகோவில்பட்டி ஏரிக்கரை பகுதியில் தி.மு.க.வை சேர்ந்த சிலர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயல்வதாக தேர்தல் நடத்து அலுவலர்களுக்கு புகார் வந்தது. அந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்திய, போது தி.மு.க.வை சேர்ந்த கருப்பையா மற்றும் கணேசன் ஆகிய இருவரும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக ரூ.26 ஆயிரத்து 250 வைத்திருந்ததாக தெரிகிறது. இதனையடுத்து அந்த பணத்தை தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் பறிமுதல் செய்து அவற்றை தேர்தல் நடத்தும் அலுவலர் தண்டாயுதபாணியிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் இருவர் மீதும் இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், வாக்காளர்களுக்கு பணம் வழங்க முயன்ற சம்பவத்தில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story