கண்டக்டரை தாக்கிய 2 பேர் கைது
விருதுநகரில் பஸ் கண்டக்டரை தாக்கிய 2 பேைர கைது செய்தனர்.
விருதுநகர்,
சிவகாசியில் இருந்து மதுரை சென்ற தனியார் பஸ்சில் திருத்தங்கல்லை சேர்ந்த தணிகைராஜ் (வயது 28), ஆனந்தகுமார் (29) ஆகிய இருவரும் பயணம் செய்தனர். இவர்கள் இருவரும் பஸ்சின் பின் படிக்கட்டில் நின்றபடியே பயணம் செய்ததால் பஸ் கண்டக்டர் தங்கராஜ் (28) அவர்கள் இருவரையும் பஸ்சிற்குள் வந்து அமருமாறு கூறினார். இதில் ஏற்பட்ட தகராறில் தணிகைராஜ், ஆனந்தகுமார்ஆகிய இருவரும் பஸ் கண்டக்டர் தங்கராஜை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது பற்றி தங்கராஜ் கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தணிகைராஜ், ஆனந்தகுமார் ஆகிய 2 பேரையும் ைகது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story