கோவில்களில் சிறப்பு வழிபாடு


கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 30 March 2021 12:59 AM IST (Updated: 30 March 2021 12:59 AM IST)
t-max-icont-min-icon

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சாத்தூர், 
சாத்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி  சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால், பன்னீர், தேன், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகையாக பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதையடுத்து சாமிக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் சாத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் உள்ள முருகன், வள்ளி, தெய்வானைக்கு, சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. 
அதேபோல பங்குனி மாத பவுர்ணமியையொட்டி சாத்தூர் முக்குராந்தல்லில் உள்ள மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



Next Story