நெல்லை பேட்டையில் ரெயில்வே ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு


நெல்லை பேட்டையில்  ரெயில்வே ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 30 March 2021 1:02 AM IST (Updated: 30 March 2021 1:02 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை பேட்டையில் ரெயில்வே ஊழியர் வீ்ட்டில் 10 பவுன் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பேட்டை:

நெல்லை பேட்டை திருமங்கை நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 50). இவர் நெல்லை ரெயில்வே ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 27-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு  தூத்துக்குடிக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில்  வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோ திறந்து இருந்தது. அதில் இருந்த 10 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து முத்துகிருஷ்ணன் டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். 

Next Story