நெல்லையில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது


நெல்லையில்  குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 30 March 2021 1:05 AM IST (Updated: 30 March 2021 1:05 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை:

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாடு வேளாளர் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் ரங்கராஜன் (வயது 30). 

இவர் மீது கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் கொலை மிரட்டல், அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. 

இந்த நிலையில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பரிந்துரையின் பேரில் ரங்கராஜனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

ராதாபுரம் பாவேந்தர் பாரதிதாசன் நகரை சேர்ந்த வேலு மகன் மணிகண்டன் (21) என்பவர் மீதும் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. 

இவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story