கழுகூர் ஊராட்சியில் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க பொதுமக்கள் முடிவு


கழுகூர் ஊராட்சியில் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க பொதுமக்கள் முடிவு
x
தினத்தந்தி 30 March 2021 1:11 AM IST (Updated: 30 March 2021 1:11 AM IST)
t-max-icont-min-icon

கழுகூர் ஊராட்சியில் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.

தோகைமலை
தோகைமலை அருகே உள்ள கழுகூர் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இந்தநிலையில் இப்பகுதியில் ரேஷன் கடை வைக்க வேண்டும், காவிரி குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கழுகூர் என்ற ஊர் பெயர் கஸ்பா என்று உள்ளதை மாற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் கழுகூர் மெயின் ரோட்டில் ஒரு பதாகை வைத்துள்ளனர். அதில், மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றா விட்டால் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என அதில் எழுதப்பட்டுள்ளது. 

Next Story