வெவ்வேறு சம்பவங்களில் கொத்தனார் உள்பட 3 பேர் பலி


வெவ்வேறு சம்பவங்களில்  கொத்தனார் உள்பட  3 பேர் பலி
x
தினத்தந்தி 30 March 2021 1:21 AM IST (Updated: 30 March 2021 1:21 AM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு சம்பவங்களில் கொத்தனார் உள்பட 3 பேர் பலியானார்கள்.

சமயபுரம், மார்ச். 30-
வெவ்வேறு சம்பவங்களில் கொத்தனார் உள்பட 3 பேர் பலியானார்கள்.
கொத்தனார்
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கோவத்தகுடி அரிசனதெருவைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 38). கொத்தனாரான இவர் நேற்று முன்தினம் இரவு திருப்பைஞ்ஞீலியில் இருந்து கோவிந்தாபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.அப்போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மூதாட்டி சாவு
திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்தவர் முகமது சுல்தான். இவரது மனைவி மகபூப்நிஷா (90). சம்பவத்தன்று, வீட்டில் வழுக்கி விழுந்ததில் படுகாயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பரிதாபமாக இறந்தார். இது குறித்து அரியமங்கலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ரெயில்மோதி முதியவர் பலி
திண்டுக்கல் மாவட்டம், திருநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி (64). மணப்பாறையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து இருந்த அவர் கீரைத் தோட்டம் அருகே ரெயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்றார். அப்போது, ரெயில் ஒன்று வேகமாக வந்ததால் காற்றுவீசியதில், ராமசாமி ரெயில்மீது விழுந்ததில் படுகாயம் அடைந்தார். மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருச்சி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story