ஆலங்குளம் அருகே பெண்ணை தாக்கியவருக்கு ஓராண்டு சிறை
ஆலங்குளம் அருகே பெண்ணை தாக்கியவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நெல்லை:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் மனைவி சரஸ்வதி (வயது 56). இவரது கணவரின் சகோதரரின் மகன் திருமண அழைப்பிதழில் தனது பெயர் போடவில்லை என்று கூறி, திருமணத்திற்கு போகக்கூடாது என மாரியப்பனிடம் தெரிவித்து அவரை சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதனால் கோபமடைந்த மாரியப்பனின் தம்பி ராஜா (38), என் அண்ணனை திருமணத்திற்கு இருக்க விடாமல் எப்படி அனுப்பலாம் என்று கூறி சரஸ்வதியை அவதூறாகப் பேசி பிளாஸ்டிக் சேரால் தாக்கினார்.
இதுகுறித்து சரஸ்வதி சீதபற்பநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் ராஜாவை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை ஆலங்குளம் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி அன்புதாசன் விசாரித்து ராஜாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ10,000 அபராதமும் விதித்தார்.
Related Tags :
Next Story