தஞ்சை மாவட்டத்தில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது


தஞ்சை மாவட்டத்தில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 30 March 2021 1:29 AM IST (Updated: 30 March 2021 1:29 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 2 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

தஞ்சாவூர்:-

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 2 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சென்னியமங்கலம் புது தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் ராஜா என்ற கட்ட ராஜா (வயது 40). இவர் தற்போது திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி சிவன்கோவில் தெருவில் வசித்து வருகிறார்.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் மெயின் சாலையில் உள்ள செல்லப்பாகவுண்டர் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் மகன் விக்னேஷ்வரன் (24). இவர்கள் 2 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சேகர் சஞ்சய், கலெக்டர் கோவிந்தராவுக்கு பரிந்துரை செய்தார்.

2 பேர் கைது

இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜவகர், நாச்சியார் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி ஆகியோர் குண்டர் சட்டத்தில் ராஜா, விக்னேஸ்வரன் ஆகியோரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story