திருப்பூர் மாவட்டத்தில் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு நேற்று தொடங்கியது. இதை கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு நேற்று தொடங்கியது. இதை கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு நேற்று தொடங்கியது. இதை கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.
3,871 பேர் விருப்பம்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி கொரோனா தொற்று காரணமாக 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஆகியோர் அவர்கள் விருப்பத்தின் பேரில் தபால் வாக்கு வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 12-டி படிவம் அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கி பூர்த்தி செய்து பெற தொகுதிவாரியாக அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் 441 மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 3 ஆயிரத்து 430 பேர் என மொத்தம் 3 ஆயிரத்து 871 வாக்காளர்கள் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்து இருந்தனர்.
தபால் வாக்குப்பதிவு
வாக்குச்சாவடி அலுவலர், மண்டல அலுவலர், நுண்பார்வையாளர், காவலர் மற்றும் வீடியோகிராபர் ஆகியோர் தபால் வாக்கு அளிக்கும் குழுவில் உள்ளனர். மாவட்டத்தில் 155 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் நேற்று முதல் தபால் வாக்கு போட விருப்பம் தெரிவித்தவர்களின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்.
தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நடுபஜனை தெரு பகுதியில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு நேற்று தபால் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர் வாக்கு அளிப்பதற்கு தனியாக மறைவு அமைத்து அங்கு அவர் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதை மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார். நாளையும் (புதன்கிழமை) தபால் வாக்குப்பதிவு நடக்கிறது.
பூத் சிலிப்
முன்னதாக தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நஞ்சியம்பாளையம் பகுதியில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார். பூளவாடி பிரிவு அருகில் வாகன தணிக்கையை கலெக்டர் ஆய்வு செய்தார். இதில் தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார், தாசில்தார் ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story