குன்னத்தூர் சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைவு


குன்னத்தூர் சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைவு
x
தினத்தந்தி 30 March 2021 1:41 AM IST (Updated: 30 March 2021 1:41 AM IST)
t-max-icont-min-icon

குன்னத்தூர் சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைவு

குன்னத்தூர், 
குன்னத்தூர் சந்தை கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பெரிய சந்தையாகும். இந்த சந்தை வார வாரம் திங்கட்கிழமை செயல்படும். குன்னத்தூர் பகுதியில் காடுகள் அதிகம் இருப்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் செம்மறியாடு மற்றும் வெள்ளாடு வளர்த்து வருகிறார்கள். இப்பகுதியில் வளர்க்கப்படும் ஆடுகள் விற்பனைக்காக குன்னத்தூர் சந்தைக்கு கொண்டு வருவது வழக்கம். மேலும் அந்தியூர், மேச்சேரி, மேட்டூர் பகுதியில் இருந்து அதிக அளவு வெள்ளாடு குன்னத்தூர் சந்தைக்கு விற்பனைக்கு வரும். குன்னத்தூர் சந்தையில் ஆடு வாங்குவதற்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் சரக்கு மற்றும் லாரிகளில் வருவார்கள். தற்போது தேர்தலை முன்னிட்டு அதிகாரிகள் ஆங்காங்கு நின்று கொண்டு பணத்திற்கு கணக்கு கேட்பதால் விற்பனைக்கு கொண்டு வரும் ஆடுகள் குறைவாகவும், அதேபோல் ஆடுகள் வாங்க வரும் வியாபாரிகள் வராமல் உள்ளார்கள். ஆகவே நேற்று நடைபெற்ற சந்தைக்கு வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் குறைவாகவே வந்திருந்தது.

Next Story