தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து ஓட்டு போடலாம்


தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து ஓட்டு போடலாம்
x
தினத்தந்தி 30 March 2021 2:04 AM IST (Updated: 30 March 2021 2:04 AM IST)
t-max-icont-min-icon

11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து ஓட்டு போடலாம்

பெரம்பலூர்
சட்டமன்ற தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்களிப்பதற்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடியில் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்க இயலாத வாக்காளர்கள், அவர்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட  11 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம். அதன்படி ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம், அஞ்சலக கணக்கு புத்தகம், தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுனர் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய-மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை போன்ற அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்காளர்கள் வாக்களிக்கலாம். நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்டமேலவை உறுப்பினர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்கலாம். மேலும், எந்த ஒரு வாக்காளரும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் தகவல் சீட்டை மட்டும் பயன்படுத்தி வாக்களிக்க இயலாது. இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story