உடுமலை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் கல்வி கட்டணம் முழுவதையும் கட்டச்சொல்லி வலியுறுத்துவதாக மாவட்ட கல்வி அதிகாரியிடம் பெற்றோர் புகார் செய்துள்ளனர்.

உடுமலை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் கல்வி கட்டணம் முழுவதையும் கட்டச்சொல்லி வலியுறுத்துவதாக மாவட்ட கல்வி அதிகாரியிடம் பெற்றோர் புகார் செய்துள்ளனர்.
x
தினத்தந்தி 29 March 2021 8:41 PM GMT (Updated: 29 March 2021 8:41 PM GMT)

உடுமலை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் கல்வி கட்டணம் முழுவதையும் கட்டச்சொல்லி வலியுறுத்துவதாக மாவட்ட கல்வி அதிகாரியிடம் பெற்றோர் புகார் செய்துள்ளனர்.

உடுமலை
உடுமலை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் கல்வி கட்டணம் முழுவதையும் கட்டச்சொல்லி வலியுறுத்துவதாக மாவட்ட கல்வி அதிகாரியிடம் பெற்றோர் புகார் செய்துள்ளனர்.
தனியார் பள்ளி
உடுமலை அருகே உள்ள பெரியகோட்டையில் சாந்தி மெட்ரிக்குலேசன் உயர்நிலைப்பள்ளி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகளில் கல்வி கட்டணத்தை 75 சதவீதம் மட்டுமே வசூல் செய்து கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் இந்த பள்ளியில் முழுக்கட்டணத்தையும் கட்டவேண்டும் என்று வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.
இதனால் இந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் 60-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று உடுமலை ராஜேந்திரா சாலையில் உள்ள மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
கல்வி அதிகாரியிடம் புகார்
அவர்கள் மாவட்ட கல்வி அதிகாரியிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:- இந்த பள்ளி நிர்வாகம், மாணவர்களிடம் கல்வி கட்டணம் முழுவதும் கட்டினால் மட்டுமே 3-ம் பருவத்தேர்விற்கான வினாத்தாள்கள் தரப்படும் என்று கூறுகின்றனர். மேலும் அரசு விதிமுறைக்கு புறம்பாக இந்த கல்வி ஆண்டிற்கான முழுத்தொகையையும் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். எனவே அரசு அறிவுறுத்தலின்படி 75 சதவீத கல்வி கட்டணம் மட்டும் கட்டுவதற்கு ஆவண செய்யுமாறு பெற்றோர் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
மேற்கண்டவாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த புகாரைத்தொடர்ந்து உடுமலை, மாவட்ட கல்வி அதிகாரி பழனிசாமி, பள்ளி நிர்வாகத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதைத்தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் அதிகாரி ஒருவர் வந்திருந்தார். அவரிடம் மாவட்ட கல்வி அதிகாரி, பெற்றோர்களின் கோரிக்கை குறித்து தெரிவித்து, இந்த பிரச்சினைக்கு ஒரு வாரத்தில் தீர்வு காணப்படவேண்டும் என்றார்.  இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் தெரிவிப்பதாக அந்த அதிகாரி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பெற்றோர்அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story