விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 30 March 2021 3:02 AM IST (Updated: 30 March 2021 3:02 AM IST)
t-max-icont-min-icon

தென்தாமரைகுளம் அருகே விஷம் குடித்து கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தென்தாமரைகுளம்:
 தென்தாமரைகுளம் அருகே விஷம் குடித்து கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கட்டிட தொழிலாளி
தென்தாமரைகுளம் அருகே உள்ள தேரிவிளையைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருக்கு சரசாங்கி (62) என்ற மனைவியும், 2 மகள்களும், சசிகுமார் (36), ராஜ்குமார் (24) என்ற 2 மகன்களும் இருந்தனர். 
பொன்னுசாமி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மகள்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மகன்கள் கட்டிட தொழில் செய்து வந்தனர். சரசாங்கி, தன்னுடைய மூத்த மகன் சசிகுமாருக்கு திருமணத்திற்கு பல இடங்களில் பெண் தேடி வந்தார்.
மது பழக்கம்
பல இடங்களில் பெண் பார்த்தும் ஏதோ காரணங்களால் திருமணம் நடைபெறவில்லை என்று தெரிகிறது. அதே சமயத்தில் அண்ணனுக்கே இன்னும் திருமணம் ஆகவில்லை.
அவருக்கு திருமணம் ஆன பிறகு தான், தனக்கு பெண் பார்த்து மணமுடிப்பார்கள் என நினைத்து ராஜ்குமார் மன வருத்தத்தில் இருந்து உள்ளார். இதனால் அவருக்கு மதுபழக்கம் ஏற்பட்டுள்ளது.
தற்கொலை
இந்தநிலையில் சம்பவத்தன்று ராஜ்குமார் நன்றாக மது அருந்திவிட்டு அதன் பின்னர் பூச்சி மருந்தை குடித்துள்ளார். பின்னர் தன்னுடைய தாயார் சரசாங்கியிடம் சென்று, தனக்கு திருமணம் ஆகாததால் விஷம் குடித்துவிட்டதாக கூறியுள்ளார்.
பின்னர் உடனடியாக குடும்பத்தினர் ராஜ்குமாரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சசிகுமார் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

Next Story