கிரேன் மோதி விவசாயி பலி


கிரேன் மோதி விவசாயி பலி
x
தினத்தந்தி 30 March 2021 5:01 AM IST (Updated: 30 March 2021 5:01 AM IST)
t-max-icont-min-icon

கிரேன் மோதி விவசாயி பலி

தலைவாசல்:
தலைவாசல் அருகே காமக்காபாளையம் பள்ளக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 56), விவசாயி. இவர் தனது விவசாய நிலத்தில் இருந்து கீரைகளை எடுத்துக்கொண்டு தலைவாசல் தினசரி மார்க்கெட்டுக்கு மொபட்டில் சென்றார். அங்கு கீரை விற்பனை செய்துவிட்டு மொபட்டில் ஊருக்கு திரும்பி வந்தார். தலைவாசல் அடுத்து வேதநாயகபுரம் ரோட்டில் வந்த போது அந்த வழியாக வந்த கிரேன் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் தலையில் பலத்த அடிபட்டு முத்துசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story