சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது


சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில்  வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 30 March 2021 5:02 AM IST (Updated: 30 March 2021 5:02 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது

சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது.
வாக்குப்பதிவு எந்திரம்
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 20-ந் தேதி நடைபெற்றது. 22-ந் தேதி வேட்புமனுக்கள் திரும்ப பெறுவதற்காக காலஅவகாசம் முடிவடைந்ததை தொடர்ந்து இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 207 பேர் போட்டியிடுகின்றனர்.
ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு எந்திரம் மற்றும் விவிபேட் எந்திரம் ஆகியவை பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவை பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வேட்பாளர் பெயர், சின்னம்
இந்நிலையில், வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் ஆகியவற்றை பேலட் பேப்பரில் அச்சிட்டு அதை பொருத்தும் பணி நேற்று தொடங்கியது.
சேலம் வடக்கு, மேற்கு, தெற்கு, வீரபாண்டி, சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி ஆகிய 11 தொகுதிகளிலும் வேட்பாளர் பெயர், சின்னம் ஆகியவை வாக்குப்பதிவு எந்திரங்களில் பொருத்தும் பணிகள் நாளை (புதன்கிழமை) வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை, அவர்களின் பெயர் மற்றும் ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்களின் விவரங்கள், தமிழக தலைமை தேர்தல் ஆணையம் மூலம் அரசு அச்சகங்களுக்கு அனுப்பப்பட்டன.
அனைத்து மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலர்களும், தங்களுக்கான பேலட் பேப்பர்களை சம்பந்தப்பட்ட சட்டசபை தொகுதிக்கு கொண்டு வந்துள்ளனர். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 4 ஆயிரத்து 280 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள், அந்தந்த சட்டசபை தொகுதி வாரியாக பாதுகாப்பாக தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.
பொது பார்வையாளர் ஆய்வு
இதனிடையே, சேலம் தெற்கு சட்டசபை தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி அம்மாபேட்டை சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் நேற்று நடந்தது.இந்த பணியை தேர்தல் பொது பார்வையாளர் டாக்டர் ரூபேஷ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Next Story