எந்த அடிப்படை வசதியும் செய்யாத அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் கற்றுத்தர வேண்டும்; கிணத்துக்கடவு தி.மு.க. வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் வாக்கு சேகரிப்பு
கிணத்துக்கடவு தொகுதி தி.மு.க வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் கோணவாய்க்கால் பாளையம், ராகவேந்திரா காலனி, பெரியார் நகர், அருள்முருகன் நகர் உள்பட 38 இடங்களில் ஒரே நாளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
அ.தி.மு.க.வை புறக்கணிக்க வேண்டும்
கிணத்துக்கடவு தொகுதி யில் கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதியும் நடக்கவில்லை. இதனை செய்ய தவறியஅ.தி.மு.கவை நாம் இந்த தேர்தலில் புறக்கணிக்க வேண்டும். அவர்களுக்கு தகுந்த பாடம் கற்றுத்தர வேண்டும். மீண்டும் அனைத்து வசதிகளையும் நீங்கள் பெற வேண்டுமெனில், உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களித்து, என்னை வெற்றி பெறச் செய்யுங்கள். உங்களது அனைத்து தேவைகளையும் நான் நிறைவேற்றி வைக்கிறேன். பத்தாண்டுகளுக்கு முன்பு நான் குறிச்சி நகராட்சி தலைவராக இருந்தபோது தெருக்கள் சாலைகள் அனைத்தும் நன்றாக இருந்தது. ஆனால் இப்போது பாதாள சாக்கடை என்ற பெயரில் அனைத்து தெருக்களையும் தோண்டி எடுத்து குண்டும் குழியுமாக ஆக்கிவிட்டனர். மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, சாலை வசதி, என எதுவும் கிணத்துக்கடவு தொகுதி மக்களுக்கு செய்து கொடுக்காமல் அ.தி.மு.க.வினர் ஏமாற்றி விட்டனர். நான் வெற்றி பெற்றவுடன் கிணத்துக்கடவு தொகுதி மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது எனது முதல் பணியாக இருக்கும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் சொல்லிய அனைத்து திட்டங்களையும் கிணத்துக்கடவு தொகுதி மக்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பேன்.
அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்
வாக்காளர்கள் அனைவ ரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க தயாராகி விட்ட னர். ஸ்டாலின் அவர்களை முதல்வராக ஏற்றுக் கொண்டு விட்டனர். இந்த பகுதியில் உள்ள தாய்மார்கள் பெரியவர்கள் அனைவரும் நன்கு கவனம் வைக்க வேண்டும். ஒரு ஓட்டு கூட மாற்றுக் கட்சிக்கு சென்று விடக்கூடாது. அனைவரும் எனக்கு ஆதரவு கொடுத்து மகத்தான வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story