சோழவந்தான் தொகுதியில் அ.தி.மு.க.வேட்பாளர் மாணிக்கம் வெற்றிக்கு பாடுபடுவோம்; ரஜினி மக்கள் மன்றத்தினர் ஆதரவு


சோழவந்தான் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் மாணிக்கம் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று ரஜினி மக்கள் மன்றத்தினர்
x
சோழவந்தான் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் மாணிக்கம் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று ரஜினி மக்கள் மன்றத்தினர்
தினத்தந்தி 30 March 2021 2:00 AM GMT (Updated: 30 March 2021 2:05 AM GMT)

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலூகா சோழவந்தான் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மாணிக்கம் சுட்டெரிக்கும் வெயிலில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று காலை வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் சி.புதூர், மீனாட்சிபுரம், ஆணைக்குளம், சித்தாலங்குடி, சித்தாலங்குடிகாலனி, திருவாலவாயநல்லுர், நெடுங்குளம், இராயபுரம், திருமால்நத்தம், ரிஷபம் உள்ளிட்ட 13 இடங்களில் வாக்குசேகரித்தார். அவருக்கு கிராமங்கள் தோறும் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அதன்பின் திறந்த ஜீப்பில் நின்றபடி வேட்பாளர் மாணிக்கம் பேசினார். 

அப்போது அவர் கூறியதாவது
இனியும் என்ன தேவை உள்ளதோ அனைத்தையும் நிறைவேற்றுவோம். எனவே அதிக அளவில் இரட்டைஇலையில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். 

இவ்வாறு அவர் பேசினார். 

உடன் யூனியன்சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பரந்தாமன், தண்டபாணி, ராஜன், முருகேசன் கூட்டுறவு சங்க தலைவர் உங்குசாமி, பேரூர் செயலாளர் கொரியர் கணேசன், பஞ்சாயத்து தலைவர்கள் ஆலயமணி, பாண்டுரங்கன், கட்சி நிர்வாகிகள் இஞ்சிதேவர், கணேசன், சேவியர், சந்திரன், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி முரளிராமசாமி உள்படபலர் வந்திருந்தனர். மேலும் கட்டபுலிநகர் கருப்பு கோவிலில் வாடிப்பட்டி, அலங்காநல்லுர் ஒன்றிய ரஜினி மக்கள் மன்றத்தினர் ஒன்றிய நிர்வாகிகள் தங்கசுரேஷ்,அய்யங்கோட்டை விஜயக்குமார், கருப்பையா, முத்துப்பாண்டி, பொன்.பாலமுருகன் உள்ளிட்ட 1200 பேர் அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்து வேட்பாளர் மாணிக்கத்திற்கு சால்வை அணிவித்து வெற்றிக்கு பாடுபடுவதாக தெரிவித்தனர்.

Next Story