பாப்பிரெட்டிப்பட்டி அருகே விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவன் சாவு


பாப்பிரெட்டிப்பட்டி அருகே விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவன் சாவு
x
தினத்தந்தி 30 March 2021 7:41 AM IST (Updated: 30 March 2021 7:41 AM IST)
t-max-icont-min-icon

பாப்பிரெட்டிப்பட்டி அருகே நடந்த விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவன் இறந்தார்.

பொம்மிடி:
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் குணசேகரன். ஆசிரியர். இவருடைய மகன் பிரணவ் (வயது 19). இவர் திருச்சியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று பிரணவ் தனது நண்பர் மெனசி ஜீவா நகரை சேர்ந்த அரவிந்த் (19) என்பவருடைய வீட்டுக்கு சென்றார். அங்கு நண்பரின் பிறந்த நாள் விழாவை கொண்டாடி விட்டு மீண்டும் அவர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். அப்போது வழியில் சாலையின் குறுக்கே நாய் ஒன்று ஓடியது. இதனால் நிலை தடுமாறி மாணவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story