சிவகாசி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் லட்சுமி கணேசனுக்கு ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகிகள் ஆதரவு


சிவகாசி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் லட்சுமி கணேசனுக்கு ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகிகள் ஆதரவு
x
தினத்தந்தி 30 March 2021 7:45 AM IST (Updated: 30 March 2021 7:52 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் லட்சுமி கணேசன் கடந்த சில நாட்களாக தொகுதி முழுவதும் பல்வேறு பகுதியில் சூறாவளி பிரசாரம் செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விளம்பட்டி பஞ்சாயத்து பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள நாடார் உறவின்முறை நிர்வாகிகளை சந்தித்து அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கேட்டார். பின்னர் பூலாவூரணி கிராமத்துக்கு வந்தார். அப்போது அங்கு திரண்டு இருந்த அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாழ்த்து கோஷம் போட்டு வரவேற்றனர். பின்னர் அ.தி.மு.க. வெற்றி வேட்பாளர் காளீஸ்வரி ராஜேந்திரனை சந்தித்து ஆதரவு கேட்டார். பின்னர் மாரனேரி கிராமத்துக்கு சென்ற லட்சுமி கணேசன் அங்கு சமுதாய தலைவர்களை சந்தித்து தனக்கு 
ஆதரவு கோரினார். அப்போது அங்கு கூடியிருந்த வாக்காளர்கள் மத்தியில் வெற்றி வேட்பாளர் லட்சுமி கணேசன் பேசியதாவது:

சிவகாசி சட்டமன்ற தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி இருக்கிறார். இது மட்டும் அல்லாமல் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியது. சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 90 சதசிவகாசி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் லட்சுமி கணேசனுக்கு ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகிகள் ஆதரவு.சிவகாசி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் லட்சுமி கணேசன் கடந்த சில நாட்களாக தொகுதி முழுவதும் பல்வேறு பகுதியில் சூறாவளி பிரசாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விளம்பட்டி பஞ்சாயத்து பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள 
நாடார் உறவின்முறை நிர்வாகிகளை சந்தித்து அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கேட்டார். பின்னர் பூலாவூரணி கிராமத்துக்கு வந்தார். அப்போது அங்கு திரண்டு இருந்த அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாழ்த்து கோஷம் போட்டு வரவேற்றனர். பின்னர் அ.தி.மு.க. வெற்றி வேட்பாளர் காளீஸ்வரி ராஜேந்திரனை சந்தித்து ஆதரவு கேட்டார். பின்னர் மாரனேரி கிராமத்துக்கு சென்ற லட்சுமி கணேசன் அங்கு சமுதாய தலைவர்களை சந்தித்து தனக்கு ஆதரவு கோரினார். 

அப்போது அங்கு கூடியிருந்த வாக்காளர்கள் மத்தியில் வெற்றி வேட்பாளர் லட்சுமி கணேசன் பேசியதாவது:
சிவகாசி சட்டமன்ற தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி இருக்கிறார். இது மட்டும் அல்லாமல் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியது. சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 90 சதவீதம் பேர் பட்டாசு தொழிலில் ஈடுபடுபவர்கள் தான். இந்த தொழிலை பாதுகாத்த பெருமை முதல்அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கும் உண்டு. இனி வரும் காலங்களிலும் இந்த தொழில் பாதுகாக்க வாக்காள பெருமக்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பிரச்சாரத்தின் போது அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பலராமன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். பின்னர் ரஜினி மக்கள் மன்ற ஒன்றிய செயலாளர் சக்திவேல் பாண்டியன், நகர இணை செயலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தினரை அ.தி.மு.க. வேட்பாளர் லட்சுமி கணேசன் சந்தித்து ஆதரவு கேட்டார். 

அதற்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் முழு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியின் போது ஒன்றிய செயலாளர் பலராம், திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், ஜெயலலிதா பேரவை பிலிப்வாசு, வக்கீல் கணேசன் உள்பட பலர் இருந்தனர்.வீதம் பேர் பட்டாசு தொழிலில் ஈடுபடுபவர்கள் தான். இந்த தொழிலை பாதுகாத்த பெருமை முதல்அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கும் உண்டு. இனி வரும் காலங்களிலும் இந்த தொழில் பாதுகாக்க வாக்காள பெருமக்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பிரச்சாரத்தின் போது அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பலராமன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். பின்னர் ரஜினி மக்கள் மன்ற ஒன்றிய செயலாளர் சக்திவேல் பாண்டியன், நகர இணை செயலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தினரை அ.தி.மு.க. வேட்பாளர் லட்சுமி கணேசன் சந்தித்து ஆதரவு கேட்டார். அதற்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் முழு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியின் போது ஒன்றிய செயலாளர் பலராம், திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், ஜெயலலிதா பேரவை பிலிப்வாசு, வக்கீல் கணேசன் உள்பட பலர் இருந்தனர்.

Next Story