இளைஞர்களுக்கு இலவச பயிற்சி மையம் அமைத்து வளமான எதிர்காலத்தை உருவாக்குவேன்; அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் பேச்சு
சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளான பெரியகொல்லபட்டி, நீராவி பட்டி, அய்யம்பட்டி, சடையம்பட்டி, சத்திரப்பட்டி, மேட்டுப்பட்டி, கண்மாய் சூரங்குடி, மேலப்புதூர், ஸ்ரீரங்கபுரம், உள்ளிட்ட பல பகுதிகளில் அ.தி.மு.க வேட்பாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் அ.தி.மு.க.வின் வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்கு சேகரிப்பின் போது கிராமப் பெண்கள் மற்றும் பெரியவர்களிடம் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தால் உங்கள் கிராமப்பகுதியில் உள்ள அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி அனைத்தையும் சிறப்பான முறையில் செய்து தருவேன். என்றும் அந்தப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு குழாய் அமைத்து தருவேன் இலவச பயிற்சி மையம் அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யும் வகையில் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். மேலும் வீட்டில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும். அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா
சோலார் சமையல் அடுப்பு, அம்மா வாஷிங் மெஷின் வழங்கப்படும். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 7,500 ரூபாய் உழவு மானியம் வழங்கப்படும், அனைத்து குடும்பத்தாருக்கும் வருடத்திற்கு ஆறு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும். அனைவருக்கும் இலவச அரசு கேபிள் டிவி இணைப்பு வழங்கப்படும், ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு அவசர தேவைக்கு பேங்கிங் கார்டு மூலம் வட்டியில்லா கடன் வழங்கப்படும். மகளிர்களுக்கு நகரப் பேருந்துகளில் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும். திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் வழங்குவதுடன். பட்டதாரி பெண்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் திருமண உதவித்தொகை வழங்கப்படும். ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 25 ஆயிரம் மானிய விலையில் எம்.ஜி.ஆர். பசுமை ஆட்டோ வழங்கப்படும்.
பிரச்சாரத்தில் அவருடன் மாநில அம்மா பேரவை துணைச்செயலாளர் சேது ராமானுஜம், சாத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் விஜய நல்லதம்பி, சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முக கனி, மாநில பொதுக்குழு உறுப்பினர் வேலாயுதம், மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் இந்திரா கண்ணன், பூபாலன் மற்றும் கழக அ.தி.மு.க. பாரதிய ஜனதா, தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் ஏனைய கூட்டணி கட்சி நகர ஒன்றிய கிளை கழகசெயலாளர்கள் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story