இளைஞர்கள் வேலை பெறும் வகையில் பூம்புகாரில் தொழிற்சாலை அமைக்கப்படும்; அ.தி.மு.க. வேட்பாளர் பவுன்ராஜ் உறுதி


இளைஞர்கள் வேலை பெறும் வகையில் பூம்புகாரில் தொழிற்சாலை அமைக்கப்படும்; அ.தி.மு.க. வேட்பாளர் பவுன்ராஜ் உறுதி
x
தினத்தந்தி 30 March 2021 3:45 AM GMT (Updated: 30 March 2021 3:46 AM GMT)

இளைஞர்கள் வேலை பெறும் வகையில் பூம்புகாரில் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று அ.தி.மு.க. வேட்பாளர் பவுன்ராஜ் கூறினார்.

வாக்குசேகரிப்பு
பூம்புகார் சட்டசபை தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் பவுன்ராஜ் எம்.எல்.ஏ. குத்தாலம் தெற்கு ஒன்றிய பகுதியான நக்கம்பாடி, பாலையூர், பருத்திக்குடி, கோமல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று இரட்டை இலை சின்னத்துக்கு திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு மக்கள் சிறப்பான வரவேற்பு அளி்த்தார். 

வாக்குசேகரிப்பின் போது பவுன்ராஜ் எம்.எல்.ஏ. கூறியதாவது:- 

தொழிற்சாலை
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதியில் கூறிய திட்டங்களை நிறைவேற்றித் தருகிறேன். எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள். நான்(பவுன்ராஜ்) சட்டசபையில் பேசி கோரிக்கை விடுத்ததால் மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டசபை தொகுதியில் தொழிற்சாலை அமைய பாடுபடுவேன். தொழிற்சாலை அமைந்தால் பட்டதாரி இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும்  நேரடியாகவும், மறைமுகமாகவும், வேலை கிடைக்கும். பூம்புகார் தொகுதியில் விடுபட்ட தி்ட்டங்களை நிறைவேற்றவும் மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் எனக்கு மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளியுங்கள். 

இவ்வாறு அவர் கூறினார். அப்போது அவருடன் குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன் மற்றும் அ.தி.மு.க, பா.ம.க, த.மா.கா, பா.ஜனதா கட்சியினர் இருந்தனர்.

Next Story