மின்னணு எந்திரத்தில் பொருத்துவதற்கான வாக்குச்சீட்டுகள் அனுப்பி வைப்பு


வாக்குச்சீட்டுகள் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.
x
வாக்குச்சீட்டுகள் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.
தினத்தந்தி 30 March 2021 4:14 AM GMT (Updated: 30 March 2021 4:14 AM GMT)

மின்னணு எந்திரத்தில் பொருத்துவதற்கான வாக்குச்சீட்டுகள் அனுப்பி வைப்பு

கோவை

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 130-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களின் பெயர்கள், கட்சி சின்னம் கொண்ட வாக்குச்சீட்டுகள் கடந்த சில நாட்களாக இரவு-பகலாக கோவையில் அரசு அச்சகத்தில் அச்சிடப்பட்டன. 


பின்னர் அவை கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூலத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.இந்த நிலையில் அந்த வாக்குச்சீட்டுகள் அந்தந்த தொகுதிகளில் உள்ள பாதுகாப்பு அறைகளுக்கு அனுப்பும் பணி நேற்று நடந்தது. 

இதற்காக கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூலத்தில் இருந்து வாக்குச்சீட்டுகள் அடங்கிய இரும்பு பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் வேனில் ஏற்றப்பட்டன. பின்னர் அவை அந்தந்த தொகுதிகளில் உள்ள பாதுகாப்பு அறைக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டன.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 425 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. அந்த வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஏற்கனவே அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டன.

 ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒரு வாக்குச்சீட்டு பொருத்தப்படும். அதில் வேட்பாளரின் பெயர், கட்சி சின்னம் ஆகியவை பொறிக்கப்பட்டிருக்கும். 

அதன்படி கோவை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 425 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு தேவையான 4 ஆயிரத்து 425 வாக்குச்சீட்டுகள் மற்றும் அவசர தேவைக்காக 20 சதவீதமாக கூடுதலாக 900 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு தேவையான வாக்குச்சீட்டுகளும் சேர்த்து அனுப்பப்பட் டுள்ளன. 

அந்த வாக்குச்சீட்டுகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) பொருத்தப்படும் என்று தெரிகிறது. அப்போது அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஏஜெண்டுகள் இருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story