பேரூர் ஆதினம் மருதாசல அடிகளாருடன் கமல்ஹாசன் சந்திப்பு


பேரூர் ஆதினம் மருதாசல அடிகளாருடன் கமல்ஹாசன் சந்திப்பு
x
பேரூர் ஆதினம் மருதாசல அடிகளாருடன் கமல்ஹாசன் சந்திப்பு
தினத்தந்தி 30 March 2021 10:11 AM IST (Updated: 30 March 2021 10:11 AM IST)
t-max-icont-min-icon

பேரூர் ஆதினம் மருதாசல அடிகளாருடன் கமல்ஹாசன் சந்திப்பு

பேரூர்

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரும், அக் கட்சி தலைவருமான கமல்ஹாசன் நேற்று காலை, கோவை தமிழ்கல்லூரி வளாகத்தில் உள்ள பேரூர் ஆதினம் மடத்திற்கு சென்று, அங்குள்ள பேரூர் ஆதினம் மருதாசலம் அடிகளாரை நேரில் சந்தித்து பேசினார். 

முன்னதாக, பேரூர் ஆதீனத்தை சந்திக்க வந்த கமலஹாசன் ஊன்றுகோல் உதவியுடன் நடந்து வந்தார். காலில் அறுவை சிகிச்சை செய்த இடத்தில், பிரசாரத்தின் போது தவறுதலாக யாரோ ஒருவர் மிதித்து இருந்ததால் கமலுக்கு காலில் வலி ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வந்த அவர், ஊன்று கோலுடன் அங்கு வந்தார்.

 அப்போது அவர், பேரூர் ஆதினத்திடம் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் தனக்கு ஆதரவு கேட்டார். மடத்திற்கு வரும் நபர்களுக்கு விபூதி, பிரசாதம் கொடுப்பது வழக்கம், ஆனால் கமல்ஹாசனுக்கு அவைகள் கொடுக்கவில்லை என்பதே குறிப்பிடத்தக்கது.
-

Next Story