கொடிசியாவில் மீண்டும் கொரோனா சிகிச்சை மையம்
கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் நிலைமையை சமாளிக்க கொடிசியாவில் மீண்டும் சிகிச்சை மையம் அமைப்பது பற்றி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
கோவை
கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் நிலைமையை சமாளிக்க கொடிசியாவில் மீண்டும் சிகிச்சை மையம் அமைப்பது பற்றி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
கொடிசியாவில் மீண்டும் சிகிச்சை மையம்
கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது தினமும் 150-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவுவதால் நாளுக்கு நாள் தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
அதனால் சிகிச்சை மையங்களை தயார்படுத்தும் பணியில் கோவை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது.
அதன்படி முதல்கட்டமாக கோவை பாரதியார் பல்கலைக்கழக விடுதியில் 400 படுக்கை வசதியுடன் கூடிய சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட வசதிகள் போதுமான அளவில் உள்ளன.
அதைத் தொடர்ந்து தற்போது கொடிசியாவில மீண்டும் கொரோனா சிகிச்சை மையம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்டவர்கள்
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவையில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருகிறது. தற்போது கோவை மாவட்டத்தில் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆயிரத்து 172 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனாவினால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் இ.எஸ்.ஐ, கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவர்கள் தவிர லேசான தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முன்பு போல கொரோனா சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக பாரதியார் பல்கலைக்கழக விடுதி, மற்றும் கொடிசியாவில் சிகிச்சை மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர மேலும் சில இடங்களில் சிகிச்சை மையம் அமைக்க உள்ளோம்.
தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்தால் அதை சமாளிக்கும் வகையில் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story