ராதாபுரம் தொகுதி வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரை பிரசாரம்


ராதாபுரம் தொகுதி வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரை பிரசாரம்
x
தினத்தந்தி 30 March 2021 4:49 AM GMT (Updated: 30 March 2021 4:49 AM GMT)

ராதாபுரம் தொகுதி வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரை பிரசாரம்

ராதாபுரம்,
ராதாபுரம் தொகுதி வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் என்று அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரை பிரசாரம் செய்தார்.

இன்பதுரை பிரசாரம்
ராதாபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரை தொகுதி முழுவதும் கிராமம், கிராமமாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். 

இந்த நிலையில் ராதாபுரம் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட இடிந்தகரை, விஜயாபதி மேலூர், விஜயாபதி கீழூர், தில்லைவனம் தோப்பு, தோமையார்புரம், ஆவுடையாள்புரம், கொத்தன்குளம், அரசர்குளம் ஆகிய கிராமங்களில் பிரசாரம் செய்தார். அப்போது ஏராளமான பெண்கள், வேட்பாளர் இன்பதுரைக்கு ஆரத்தி எடுத்து குலவையிட்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வளர்ச்சி திட்டங்கள்
பிரசாரத்தின் போது வேட்பாளர் இன்பதுரை பேசும் போது கூறியதாவது:-

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வல்லவராக திகழ்கிறார். ஏழை மக்களுக்காக அவர் எண்ணற்ற திட்டங்களை உருவாக்கி அதனை நிறைவேற்றி வருகிறார். ராதாபுரம் தொகுதிக்கு ஏராளமான வளர்ச்சி திட்டங்களை அள்ளி அள்ளிக் கொடுத்தவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
திசையன்விளை தனி தாலுகாவாக உருவாக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி -கருமேனி- நம்பியாறு நதிகள் இணைப்பு திட்டம் முழு வீச்சில் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. இந்த திட்டம் முடிந்த உடன் கடலில் வீணாக கலக்கும் நீர் தடுக்கப்பட்டு நீர் ஆதாரம் பெருகும்.

இரட்டை இலை சின்னத்திற்கு...
வள்ளியூரில் பிரமாண்டமான அம்மா பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பணகுடி மற்றும் திசையன்விளையில் மனோ கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ராதாபுரம் தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.  

பிரசாரத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் நாராயண பெருமாள், ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் மைக்கேல் ராயப்பன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பால்துரை, ஆவுடைபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story