நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,075 ஆக உயர்வு


நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,075 ஆக உயர்வு
x
தினத்தந்தி 30 March 2021 10:32 AM IST (Updated: 30 March 2021 10:32 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,075 ஆக உயர்வு

நாமக்கல், மார்ச்.30-
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 2 சிறுவர்கள் உள்பட 21 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
21 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 12,054 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இதற்கிடையே நேற்று ஒரே நாளில் 3 மற்றும் 7 வயது சிறுவர்கள் உள்பட 21 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,075 ஆக உயர்ந்து உள்ளது.
முககவசம்
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11,826 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 111 பேர் இறந்து விட்ட நிலையில், 138 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், இல்லை எனில் அபராதம் செலுத்த நேரிடும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
==========

Next Story