கோவையில் 211 பேருக்கு கொரோனா
கோவையில் 211 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
கோவை
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தது. அதன் பின்னர் டிசம்பர் மாதத்தில் படிப்படியாக குறைய தொடங்கியது. தற்போது மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியல்படி கோவை மாவட்டத்தில் நேற்று 211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 3 மாதத்திற்கு பின்னர் 200 பேருக்கு மேல் ஒரே நாளில் நேற்று தான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் இதுவரை 58 ஆயிரத்து 471 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னை தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்ற வந்த கோவையை சேர்ந்த 70 வயது மூதாட்டி, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 38 வயது ஆண் ஆகியோர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 691 ஆக உயர்ந்து உள்ளது. கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 93 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இவர்களுடன் சேர்த்து இதுவரை மாவட்டத்தில் 56 ஆயிரத்து 490 பேர் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து உள்ளனர். தற்போது 1,290 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 1,803 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட உள்ளது.
Related Tags :
Next Story