கிருஷ்ணராயபுரம் தொகுதியில் மக்களுக்கு சேவை செய்வதே என் முதல் பணி; அ.தி.மு.க. வேட்பாளர் முத்துக்குமார் பேச்சு


கிருஷ்ணராயபுரம் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துக்குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது
x
கிருஷ்ணராயபுரம் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துக்குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது
தினத்தந்தி 30 March 2021 11:30 AM IST (Updated: 30 March 2021 11:18 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ந.முத்துக்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அந்தவகையில் நேற்று கரூர் நகராட்சிக்கு உட்பட்ட இ.பி. காலனி, செல்வநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.அப்போது பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது அவர் பொதுமக்களின் காலில் விழுந்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

அப்போது அவர் பெண்கள் மத்தியில் பேசியதாவது:-
என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த ஒரு வருடத்தில் தொகுதி மக்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, சாக்கடை வசதிகள் முழுமையாக செயல்படுத்தப்படும். மக்களுக்கு சேவை செய்வதே என் முதல் பணி. எனவே உங்கள் வீட்டு காவலனாக பணியாற்ற எனக்கு ஒரு வாய்ப்பு அளித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பாதம் தொட்டு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story