மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிடும் எஸ்.கதிரவனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்; தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வாக்கு சேகரிப்பு
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கதிரவனை ஆதரித்து தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
மண்ணச்சநல்லூர் சட்ட மன்ற தொகுதியில் போட்டி யிடும் தி.மு.க. வேட்பாளர் எஸ்.கதிரவனை ஆதரித்து தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு நேற்று மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த சிறுகாம்பூர் பகுதியில் உள்ள பொது மக்களிடம் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
மேலும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிக்கு மாதந்தோறும் ஆயிரம் உரிமைத்தொகை மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கடன்கள் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, சிலிண்டருக்கு ரூபாய் 100 மானியம், மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை உள்ளிட்ட தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி கழகத்தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களை முதல்வர் அரியணையில் ஏற்ற அனைவரும் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களித்து மண்ணச்ச நல்லூர் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் கதிரவனை பெருவாரியான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யும்படி உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.
வாக்கு சேகரிப்பின் போது உடன் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் மற்றும் காட்டுக்குளம் கணேசன், முன்னதாக சிறுகாம்பூர் மற்றும் கரியமாணிக்கம் பகுதியில் உள்ள தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. தி.மு.க. நகர நிர்வாகிகள் நாகரத்தினம் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் புஷ்பராஜ் சாந்தி மற்றும் கூட்டணி கட்சியை சார்ந்த ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் டிடிசி சேரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story