தமிழக உரிமைகளை காக்க தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும்
தமிழக உரிமைகளை காக்க தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும் என்று கோவையில் நடந்த பிரசாரத்தில் தயாநிதிமாறன் பேசினார்.
கோவை,
கோவை கிணத்துக்கடவு மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன் நேற்று குறிச்சி, செல்வபுரம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:- பா.ஜனதா கட்சி வெறுப்பு அரசியல் செய்து இந்துக்களின் வாக்குகளை பெற்று தமிழகத்தில் காலுன்ற பார்க்கிறது. தமிழகத்தில் உள்ள இந்துக்கள், முஸ்லிம்கள் இடையேயான பாச உறவை யாராலும் பிரிக்க முடியாது.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்தது அ.தி.மு.க. ஆனால் தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை சட்டத்தை எதிர்ப்போம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை பாதிக்கும் வகையில் நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்த சட்டம் வந்த பின்னர் தமிழகத்தில் 14 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். தற்போது கலை அறிவியல் கல்லூரியில் சேர தகுதி தேர்வு அவசியம் என்கின்றனர். எனவே மாநில அரசின் உரிமைகளை பாதுகாக்க தி.மு.க. வேட்பாளர்களுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story