அ.தி.மு.க. அரசு ஆட்சி செய்யும் தகுதியை இழந்து விட்டது; இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா
மாநில அரசின் உரிமைகளை விட்டு கொடுத்ததன் மூலம் அ.தி.மு.க. அரசு ஆட்சி செய்யும் தகுதியை இழந்து விட்டது என்று கோவையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்து உள்ளார்.
கோவை
மாநில அரசின் உரிமைகளை விட்டு கொடுத்ததன் மூலம் அ.தி.மு.க. அரசு ஆட்சி செய்யும் தகுதியை இழந்து விட்டது என்று கோவையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்து உள்ளார்.
பொதுக்கூட்டம்
கோவை வடக்கு சட்ட மன்ற தொகுதியில் போட்டியிடும்
வ.ம.சண்முகசுந்தரத்தை ஆதரித்து கோவை வடவள்ளி பி.என்.புதூரில் நேற்று பொதுக்கூட்டம் கூடைபெற்றது. கூட்டத்திற்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி., ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா கலந்து கொண்டு பேசியதாவது:-
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்பட்ட கோவையின் தொழில்நிறுவனங்களை மத்திய பா.ஜனதா அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் நிர்மூலமாக்கி விட்டது.
பொதுத்துறை நிறுவனங்களை முன்னாள் பிரதமர் நேரு உருவாக்கிய போது நவீன இந்தியாவின், நவீன கோவில்கள் என்று குறிப்பிட்டார். ஆனால் இன்று ரெயில்வே, விமானம் என அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் பா.ஜனதா அரசு தனியார் மயமாக்கி வருகிறது.
மாநில அரசு உரிமைகள்
கல்வி, வேளாண்மை ஆகியவை மாநில அரசின் பட்டியலில் உள்ளது. ஆனால் மத்திய அரசு மாநிலங்களுடன் விவாதிக்காமல் 3 வேளாண் சட்டங்களையும், புதிய கல்விக்கொள்கையும் கொண்டு வந்து உள்ளது.
மாநில அரசின் உரிமைகளை விட்டு கொடுத்து விட்டதன் மூலம் அ.தி.மு.க. அரசு ஆட்சி செய்யும் தகுதியை இழந்து விட்டது. அ.தி.மு.க.வின் தோளில் ஏறி தமிழகத்தில் காலுன்ற பா.ஜனதா முயற்சி செய்கிறது.
எனவே வாக்காளராகிய நீங்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் தி.மு.க. வேட்பாளர் வ.ம.சண்முகசுந்தரம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story