ஜோலார்பேட்டை அருகே தெருநாய்கள் கடித்து 5 கன்றுக்குட்டிகள் காயம்
ஜோலார்பேட்டை அருகே தெருநாய்கள் கடித்து 5 கன்றுக்குட்டிகள் காயம்
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அடுத்த ரெட்டியூர் கிராமத்தில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் சிறுவர்கள் தெருவில் செல்லும் போது தெருநாய்கள் சிறுவர்களை துரத்துகின்றன. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதே பகுதியில் வசித்து வரும் வெங்கடகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான கன்றுக்குட்டி தெருவில் சென்றபோது தெரு நாய்கள் கடித்து கன்றுக்குட்டி படுகாயம் அடைந்தது. இந்த நிலையில் அதேப்பகுதியில் 5-க்கும் மேற்பட்ட கன்றுக்குட்டிகளை தெரு நாய்கள் கடித்து உள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் மற்றும் வயதானவர்கள் தெருவில் செல்ல பயப்படுகின்றனர் எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Related Tags :
Next Story