வேலூர் அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு


வேலூர் அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 30 March 2021 9:51 AM GMT (Updated: 30 March 2021 11:32 AM GMT)

வேலூர் அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

ஆற்காடு

ரத்தனகிரியை அடுத்த பூட்டுத்தாக்கு பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 38). இவர் வேலூர் சத்துவாச்சாரியில் ரத்த பரிசோதனை நிலையம் நடத்திவருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை வேலையை முடித்துக்கொண்டு மொபட்டில் வீடு திரும்பியுள்ளார்.

 அரப்பாக்கத்தில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே வரும்போது பின்னால் மோட்டார்சைக்கிளில்  ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் தனலட்சுமி அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளனர். 
இதுகுறித்து தனலட்சுமி ரத்தனகிரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story